திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மையம் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களின் நியாயமான 7 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி ஒரு மணி நேரம் அலுவலகத்திலிருந்து முன்னதாக வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மையம் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களின் நியாயமான 7 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி ஒரு மணி நேரம் அலுவலகத்திலிருந்து முன்னதாக வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அளவிற்கு அதிகமான முகாம்கள் நடத்துவதை கைவிடவும், போதிய கால அவகாசம், நிதி ஒதுக்கீடு, கூடுதலான தன்னார்வலர்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். 31-3-2023 அன்று கலைக்கப்பட்ட 97 பேரிடர் மேலாண்மைப் பிரிவு பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.சான்றிதழ் வழங்கும் பணிகள் மற்றும் அரசு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த அனைத்து வட்டங்களிலும் ஒரு சிறப்பு துணை வட்டாட்சியர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும்.அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் பணிப்பளு மற்றும் பணி தன்மைக்கேற்ப மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும்.கருணை அடிப்படை நியமனத்திற்கான உச்சவரம்பை மீண்டும் 25% ஆக உயர்த்த வேண்டும்.இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் தட்டச்சர் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த பணி முதுநிலை நிர்ணயம் செய்வது தொடர்பான அரசாணையை உடன் வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
















