திருக்கடையூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் ஒன்றியம் திருக்கடையூரில் தபால் நிலையம் முன்பு மத்திய பாஜக அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசையும் துணை போகும் அதிமுகவையும் கண்டித்தும் 100 நாள் வேலை திட்டத்தை முடக்கியதோடு பல்வேறு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திமுக மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன் தலைமையிலும் செம்பனார்கோவில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மதிமுக விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

















