சீர்காழி அருகே தண்ணீரின்றி காயும் 100 ஏக்கர் குறுவை பயிர்கள். வயலில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம், பாதரக்குடி, சேந்தங்குடி ஆகிய ஆகிய பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை பயிர்கள் தற்போது கதிர் வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள பழவாரிலிருந்து பிரியும் கிளை பாசன வாய்க்காலான தெற்கு வெளி, வடக்குவெளி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் வயல்கள் வெடிப்புவிட்டு, பயிர்கள் காய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் நாகை விழுப்புரம் நான்கு வழி சாலை பணிகளுக்காக தனியார் நிறுவனம் முகாமிற்கு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் அங்கிருந்த பாசன வாய்க்கால்களை லாரி போன்ற கனரக வாகன சென்று வர ஏதுவாக வாய்க்கால்கள் மூடப்பட்டு தூர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 100 ஏக்கருக்கு மேலான குறுவை பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருவதால் வேதனை அடைந்த விவசாயிகள் பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்த வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூடப்பட்டுள்ள பாசன வாய்க்கால்களை தூர்வாரி தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும், காயும் பயிர்களை காப்பாற்ற நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version