புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனால் பிப்ரவரி 1 தேதி முதல் சிகரெட் விலை கணிசமாக உயருகிறது. ஆயிரம் சிகரெட்களுக்கு 2 ஆயிரத்து 50 ரூபாய் முதல் 8 ஆயிரத்து 500 ரூபாய் வரை கூடுதல் கலால் வரி விதிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல, மெல்லும் புகையிலை மீதான வரி 25 சதவீதத்தில் இருந்து, 100 சதவீதமாகவும், ஹூக்கா புகையிலை வரி, 25 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாகவும், பைப் மற்றும் சிகரெட்டுகளுக்கான புகை கலவைகள் மீதான வரி, 60 சதவீதத்தில் இருந்து 325 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் சிகரெட் விலை, வரலாறு காணாத வகையில் உயர உ ள்ளது.
இந்த விலை உயர்வு, கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. புகைப்பழக்கத்தை கைவிட உதவும் என ஒரு தரப்பினரும், சட்ட விரோத விற்பனை அதிகரிக்கும் என, மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

















