கன்னியாகுமரி மாவட்டம்:சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் இன்று உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளிடம் மாபெரும் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

புகையிலை நுகர்வு மற்றும் அதன் தயாரிப்பு மற்றும் குடும்பம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழலில் அதன் தீய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று, உலக சுகாதார அமைப்பால் உலக புகையிலை எதிர்ப்பு தினம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று கன்னியாகுமரியில் இந்திய பல் மருத்துவ சங்கம் கன்னியாகுமரி கிளை மற்றும் ராஜாஸ் பல் மருத்துவமனை இணைந்து உலகப் புகையிலை எதிர்ப்பு தினமான இன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் இடையே மாபெரும் விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது இதில் புகையிலையின் தீமைகளை சுற்றுலா பயணிகளுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று புகையிலைக்கு எதிரான பதாகைகள் ஏந்தியும், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமை பற்றி அதை விட்டு விடுவதால் ஏற்படும் நன்மை பற்றி துண்டு பிரசவங்களை சுற்றுலா பயணிகளிடம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து புகையிலை நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புது புது நறுமண சுகையில் புகையிலை தயார் செய்து வருவதால் வழக்கத்துக்கு மாறாக அதிக பேர் புகையிலை உபயோகித்து வருவதாகவும் மேலும் காவல்துறைக்கு தெரியாமல் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் இதை உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.