“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டு தொடக்கி வைத்து பொதுமக்களிடம் மணு

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளையாளூர், மேமாத்தூர், அன்னவாசல் ஊராட்சிகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் இளையாளூர் ஊராட்சியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டு முகாமை தொடக்கி வைத்து பொதுமக்களிடம் மணுக்களை பெற்றார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் அதிக அளவில் குவிந்தன.

தமிழ்நாட்டில் மக்களின் அனைத்து விதமான தேவைகளை அனைத்து துறை அலுவலர்கள் அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று, கேட்டறிந்து பூர்த்தி செய்யும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் கடந்த வாரம் தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜூலை-15 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டு அக்டோபர் -15 வரை நகர்புற பகுதிகளில் 32 மற்றும் ஊரகப் பகுதிகளில் 98 என மொத்தம் 130 முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளையாளூர், மேமாத்தூர், அன்னவாசல் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் இளையாளூர் ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு, தொடக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில்
மனுக்கள் பெற சிறப்பு ‘கவுன்டர்கள்’ அமைக்கப்பட்டு பட்டா மாற்றம், ஆதார் கார்டு பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் , மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் ரேஷன் கார்டு, ஆதார், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை முகாமுக்கு கொண்டு வந்து மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தால் மனுக்களை எழுதும் அலுவலர்கள் திணறுகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் அதிக அளவில் குவிந்தன.

Exit mobile version