ஆடி அமாவாசையையொட்டி முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் லட்சக்கணக்கான மக்கள் இன்று மறைந்த தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகளில் ஆண்டுதோறும் வரும் ஆடி மாதம் மற்றும் தை மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு தை அமாவாசை இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை என்ற தர்ப்பணம் செய்து ஆறு கடல் மற்றும் நீர் நிலைகளில் புனித நீர் நீராடுவது வழக்கம் இது போன்ற நாட்களில் மறைந்த தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து வழிபட்டால் தங்களது குடும்பம் சுபிட்சம் பெறும் என்றும் பொது மக்களால் ஆண்டாண்டு காலமாக நம்பப்படுகிறது அம்மாவாசை தர்ப்பணத்தை முன்னிட்டு இன்று அதிகாலையிலே முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியது உடன் கடற்கரையில் இருந்த வேத விற்பனர்கள் மந்திரங்கள் சொல்ல பச்சரிசி, எள், தர்ப்பைப்புல் போன்றவற்றை கொண்டு பலிகர்ம பூஜை செய்து வழிபட்டதுடன் கடலில் நீராடினர் பின்னர் கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு சென்றனர் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
