மயிலாடுதுறை அருகே பொய்கைகுடி கிராமத்தில் தரமற்ற முறையில் அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் முழுமைபெறாத வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி நேற்று பரிதாப பலி, சிறுமிக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக வெற்றி கழகத்தினர், உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த காளி ஊராட்சிக்கு உட்பட்ட பொய்கைகுடி கிராமத்தில் காமராஜ் சரண்யா தம்பதியினர். காமராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் காமராஜ் தந்தை பாலையா பெயரில் ஆகாஷ் யோஜனா பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் கொற்கையைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் ராஜேஷ்குமார் என்பவரால் ஒரு ஆண்டாக வீடு கட்டப்பட்டு முழுமை பெறாமல் உள்ளது. இந்த வீட்டில் காமராஜின் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள் சஹானா ஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டின் உள்புறம் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் அதில் சிக்கிய சிறுமி பலத்த காயமடைந்து காளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற போது அங்கு மருத்துவர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லாததை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்காமல் போராட்டம் நடத்திய நிலையில் இன்று சிறுமியின் தந்தை வெளிநாட்டில் இருந்து வருவதற்கு முன்பே பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் பிரேத பரிசோதனை செய்து விட்டதாக குற்றம் சாட்டி பத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தமிழக வெற்றி கழகத்தினர் மாவட்ட செயலாளர் குட்டி கோபி தலைமையில் தரமற்ற முறையில் வீடு கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மகளை பறிகொடுத்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் சிறுமியை பறிகொடுத்த குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து சிறுமியின் தந்தை காமராஜ் வந்த நிலையில் வட்டாட்சியர் சுகுமாரன் மணல்மேடு மற்றும் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர்கள் பாலசுப்ரமணியன் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும், 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், புதிதாக வீடு கட்டி தர வேண்டும்,
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் வீடு கட்டுவதை கண்காணிக்க தவறிய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
