தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம், வரும் 8-ந்தேதி துவங்கும் என, அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்புடன், 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.
அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த திமுக, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்கியது. ஆனால், கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டும் ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜனவரி 8-ந்தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பார் என, தகவல் வெளியாகி இருக்கிறது.

















