சமூக வலைதளங்களை முறைப்படுத்தவும், தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்பதை உறுதி செய்யவும், விதிமுறைகளை பரிந்துரைப்பதற்காக, ஆந்திர மாநில அரசு, அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளது.

இந்தக் குழுவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனான அமைச்சர் நரா லோகேஷ், அமைச்சர்கள் சத்யகுமார் யாதவ¢, மனோகர், பார்த்தசாரதி, அனிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, தற்போது இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள சட்டங்கள், விதிமுறைகள், வழிகாட்டி நெறிமுறைகளில், சமூக ஊடகங்களுக்கு பொருந்தக்கூடியவை எவை. தவறான செய்திகளை வெளியிடும் சமூக ஊடகங்களை பொறுப்பாக்குவதிலும், அமல்படுத்துவதிலும் உள்ள இடைவெளி ஆகியவற்றை கண்டறிந்து பரிந்துரைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளையும் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்குமாறு ஆந்திர மாநில அரச உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக சமூக ஊடகங்களில், தனிநபர் விமர்சனங்களும், அவதூறுச் செய்திகளும் அதிக அளவில் பரப்பப்படுகின்றன. அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதில் பல்வேறு சட்டச் சிக்கல்கள் இருப்பதால், ஆந்திர மாநில அரசு முதன் முறையாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.