மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் – 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் – 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கொரடாச்சேரி அருகில் உள்ள பாலாக்குடி கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரின் மகன் சந்தோஷ் வயது 46.  இவர் மின்வாரிய ஊழியர்களுக்கு துணையாக சென்று, அவர்களுடன் இனைந்து மின் பழுது பார்ப்பது மற்றும் எலக்ட்ரிக்கல் பழுது வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தோஷ் நேற்று மாலை கொரடாச்சேரி அருகே உள்ள பெருமாளகரம் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி சரி செய்து கொண்டிருந்தபோது இவர் மீது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்ததார். தலையில் பலத்த காயமடைந்ததில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து  இறந்தவரின் உடல்நிலை எடுத்து  வந்து கொரடாச்சேரி ரயில்வே கேட் அருகில் சாலையில் போட்டு அவரது உறவினர் சாலை மறியல் செய்தனர். 
இறந்தவரின் குடும்பத்தினருக்கு  நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்தவர்களிடம், திருவாரூர் காவல்துறை டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சிவகுமார், தாசில்தார் சரவணகுமார் மின்வாரிய உதவி பொறியாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 

இறந்தவரின் உறவினர்களது கோரிக்கை தொடர்பாக அரசுக்கு தெரிவித்து உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்ததையடுத்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் கும்பகோணம் – கொரடாச்சேரி – மன்னார்குடி சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

FILENAME : TVR CURRENT SHOCK DEATH ROAD BLOCK NEWS

Exit mobile version