மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பாகசாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்பதனிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் பிரதாப்.19. டித்வா புயல் காரணமாக நேற்று மாவட்ட முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்த நிலையில் இரவு 10:30 மணிக்கு பிரதாப் டூவீலரில் கடை வீதிக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அறுந்து தொங்கிய மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த பிரதாப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த பாகசாலை போலீசார் விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவுடன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version