பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி ஒரு வருடத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தவர்களுக்கு குழந்தை பிறந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்தபோது பெண் வீட்டார் தாக்கியதாக குற்றச்சாட்டு. பெண்ணின் கணவர் மாமனார் மீது தாக்குதல் நடத்தியதில் மாமனாருக்கு விலா எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதி; பாலையூர் போலீசார் விசாரணை:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட எழுமகளூர் கிராமத்தில் வசிக்கும் விஜயகுமார் (61) என்பவரது மகன் பிரசாந்த் (31) அதே பகுதியில் வசிக்கும் வெங்கட்ராமன் என்பவரது மகள் ஸ்ரீவர்த்தினி என்பவரை கடந்த ஆண்டு பெண் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாரின் எதிர்ப்பு காரணமாக பிரசாந்த்- ஸ்ரீவர்த்தினி தம்பதி அருகில் உள்ள எஸ்.புதூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 9 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தையை பார்த்துக் கொள்ள ஆளில்லாததால் பிரசாந்த் தனது வீட்டிற்கு குழந்தையை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீவர்த்தினியின் உறவினர்களான கண்ணன் உள்ளிட்ட சிலர் தன் வீட்டிற்கு வந்து தன்னையும் தனது மகன் பிரசாந்தின் மீது தாக்குதல் நடத்தியதாக பிரசாந்தின் தந்தை விஜயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். தாக்கப்பட்ட இருவரும் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் தனது விலா எலும்பை உடைத்து விட்டதாக விஜயகுமார் கதறி அழுதார். தங்கள் மீது தாக்குதல் நடத்திய பெண்ணின் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜயகுமார் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார். இச்சம்பவம் குறித்து பாலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணத்தால் ஏற்பட்ட முன்விரோதத்தால் குடும்பத்தினர் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
