திருமணமான சில மாதங்களில் வரதட்சணை கேட்டு மதுபோதையில் மனைவியை தாக்கி கொடுமைப்படுத்திய ஆயுத படை காவலர் மீது பெண் புகார்
தனது மகனை தன்னிடம் அனுப்ப மறுத்தும் மகனை பார்க்க விடாதாதால் மன உளைச்சலுக்கு ஆளான தாய் பினாயில் குடித்து தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு
தேனி மாவட்டம் கம்பம் அருகே நாராயணதேவன் பட்டியை சேர்ந்த கௌசல்யாவின் மகள் ஆதிராவை (21) சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்களான திருப்பதி – மகேஷ்வரி ஆகியோரின் மகன் கிருஷ்ணா சிங் (34) என்பவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடத்தி வைத்துள்ளனர்
பெண்ணின் வீட்டில் 40 பவுன் நகை கொடுத்து திருமணம் முடிந்த நிலையில் இருவருக்கும் ஒன்றை வயதில் குழந்தை இருக்கின்றது
இந்த நிலையில் திருமணம் முடிந்து சில மாதங்களில் கிருஷ்ணாசிங் சென்னையில் பணிபுரிந்த போது மாமனார் திருப்பதி பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்
இதனை அடுத்து சென்னையில் தனது கணவருடன் வசித்து வந்த ஆந்திராவை கணவர் கிருஷ்ணாசிங் குடித்துவிட்டு மதுபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது
மேலும் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை துன்புறுத்தி தனது வீட்டில் இருந்து மேலும் நகைகளை பெற்று வர வேண்டும் என தனது மாமனார் மாமியார் ஆகியோருடன் சேர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது
இதுகுறித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போடி மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஆதிரா தனது கணவர் கிருஷ்ணாசிங், மாமானர் திருப்பதி, மாமியார் மகேஷ்வரி ஆகியோர் மீது வரதட்சணை புகார் கொடுத்து இருந்தார் இதன் பேரில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
இந்த நிலையில் தங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததால் 1 1/2 வயது மகனை தாயிடம் கொடுக்காமல் அடித்து துன்புறுத்துவதாகவும் தனது மகனை தன்னிடம் கொடுக்க கேட்க சென்ற பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்கிய அவதூறாக பேசி இருப்பதாகவும் தான் காவல்துறையில் பணி புரிவதால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டியுள்ளார்
தன் மகனை தன்னிடம் கொடுக்காததால் மன உளைச்சலில் இருந்த பெண் ஆதிரா பாடி ஸ்பிரே மற்றும் பினாயிலை குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்
பின்னர் பெண்ணின் குடும்பத்தார் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்
இதுகுறித்து பெண்ணின் தாயார் கூறுகையில் தன் மகளை தற்கொலைக்கு தூண்டிய அவரது கணவர், மாமனார், மாமியார் மீது உரிய நடவடிக்க எடுக்க வேண்டும் என்றும் தனது பேரனை மீட்டு தர வேண்டும் என்றும் திருமணத்திற்கு போட்ட நகைகளையும் மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்
