டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. கடந்த சில நாட்களாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் திடீரென இன்று காலை முதல் கடும் குளிருடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கமலாபுரம், கண்கொடுத்தவணிதம், கோமல், மாவூர், மாங்குடி, அடியக்கமங்கலம், தூத்துக்குடி, சன்னாநல்லுர், மாப்பிள்ளைகுப்பம், சேந்தமங்கலம், வண்டாம்பாளை உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஐந்து மணி நேரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடும் குளிருடன் மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட பலரும் அவதி அடைந்துள்ளனர்

















