கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

“கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம்…” திருவாரூரில் விக்ரமராஜா பேட்டி..

 திருவாரூரில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் 43 வது விழிப்புணர்வு மாநாடு இன்று நடைபெறுகிறது..

ஒவ்வொரு வருடமும் மே-5 ம் தேதி வணிகர்களின் தினமாக வணிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மாநாடு நடத்துவது வழக்கம்.
அதன்படி தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக 43 வது விழிப்புணர்வு மாநாடு திருவாரூரில் இன்று நடைபெறுகிறது.
அதனை முன்னிட்டு திருவாரூர் வன்மீகபுரத்தில் நடைபெறும் மாநாட்டு திடலில் வணிகர் சங்க கொடியை சங்கத்தின் மாநில தலைவர் விக்கிரம ராஜா ஏற்றி வைத்தார்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா.. கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆன்லைன் வர்த்தகங்கள் அத்துமீறலை எதிர்த்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது.. அதற்கு சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்.. எனவும் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது.. வரக்கூடிய காலத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பதை ஒருமுறை வரியாக்க வேண்டும்.. சட்ட விதிகளை எளிமையாக்க வேண்டும்.. என்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறப்படுத்துவது இந்த மாநாட்டின் நோக்கம் என்று பேட்டி அளித்தார்.

பேட்டி: விக்ரம ராஜா,
மாநிலத் தலைவர்,
வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு..

Exit mobile version