செந்தில் பாலாஜி பயத்தில் பதறுவது ஏன் – ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் புதிய தனியார் மழலையர் பள்ளி துவக்க விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு வித்யாரம்பம் நிகழ்வினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் தொடர்ந்து காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் விற்பனையை துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாநிலச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே டி விஜயன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன் மாவட்ட பொருளாளர் திருப்பதி ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்

தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறும் போது

கரூரில் 41 உயிரிழந்த சம்பவத்துக்கு பின் உண்மை நிலையை மக்களிடத்தில் விளக்க வேண்டிய தார்மீக பொறுப்பில் இருந்து அரசு விலகிச் செல்கிறது என்கின்ற சந்தேகம், கவலையும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் வகையில் அரசின் கருத்துக்கள், அதிகாரிகளின் கருத்துக்கள் அமைந்துள்ளதை நாம் கவனமாக பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது.

கரூர் துயர சம்பவத்திற்கு ஒரு நபர் விசாரணை அமைத்துள்ளோம் என்று முதலமைச்சர் ஸ்டாரின் அறிக்கை வெளியிட்டிருந்தார் ,ஆணையத்தின் அறிக்கையை அடிப்படையை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார் . அதன்பிறகு மின்வாரிய உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், கூடுதல் டிஜிபி ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து அரசு நடவடிக்கைகளை நியாய படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார்கள்.

இதற்கெல்லாம் மேலாக வருவாய் துறை செயலாளர் ,மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ,டி.ஜி.பி. அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். அதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டு இது தொடர்பாக கருத்துக்கள் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை தோணியில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அதோடு செந்தில் பாலாஜி அவசர, அவசரமாக பதட்டத்தோடு செய்தியாளர்களை சந்தித்து கருத்துக்களை தெரிவித்தார், பதற்றத்தோடு இருந்த செந்தில் பாலாஜி என்ன சொல்ல வருகிறார் என்பது நமக்கும் புரியவில்லை மக்களுக்கும் புரியவில்லை?

விசாரணை ஆணையம் அரசுக்கு வேண்டிய திசையிலே ,அவர்கள் கருத்துக்கள் அடிப்படையில் வழி நடத்துகிறார்களோ என்ற நிலை தான் இன்றைக்கு வெட்ட வெளிச்சமாக அமைந்து வருகிறது .

பொதுவாக விசாரணை ஆணையம் அமைந்த பிறகு அது தொடர்பான வாதங்கள், வீடியோக்கள் அரசு அதிகாரிகள் வெளியிடுவது ஆணையத்தின் நியமனங்களை கேள்விக்குறியாக்கும் வகையில், அவமதிக்கும் வகையில் செயலாகத்தான் பார்க்கப்படுகிறது .
விசாரணை நடக்கும் போது அது தொடர்பான அறிக்கை தொடர்ந்து வெளியாகி வருவது விசாரணை நடுநிலையோடு, நம்பகத்தன்மையோடு நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகி அமைகிறது.

திறமைமிக்க சேவையால் மூலம் ஆண்டாண்டு உழைத்து மக்கள் நம்பகைத்தன்மை பெற்றுள்ள அரசு உயர் பொறுப்பில் அதிகாரிகளை, திமுக அரசு தங்களை காப்பாற்றி கொள்ள தவறாக வழி நடத்துகிறார்கள் என்ற மிகப்பெரிய கவலை ஏற்பட்டுள்ளது. அரசும், அரசு அதிகாரிகளும் நிரந்தரமானவர்கள் மக்களுக்கு சொந்தமானவர்கள் அவர்களை வழிநடத்தும் வாய்ப்பு ஐந்தாண்டுக்கு ஒரு முறை அரசியல் கட்சிகளுக்கு மக்கள் தீர்ப்பும் மூலம் வழங்கப்பட்டு வருகிறது அதுதான் ஜனநாயகம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 53 ஆண்டுகால வரலாற்றில் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா, அதனை தொடர்ந்து எடப்பாடியார் ஆகியோர் சிறப்பாக வழி நடத்தி உண்மையான ஜனநாயகத்தை உருவாக்கினர்கள். 75 ஆண்டு கால திமுக பேறிஞர்
அண்ணாவில் தொடங்கி கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் தற்போது வரை 25 ஆண்டுகள் தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்கள். அதற்கு முன்பாக காங்கிரஸ் சார்பில் காமராஜர் அரசை வழிநடத்தும் பொறுப்பில் இருந்தார். ஆனால் இன்றைக்கு திமுக ஆட்சியில் எங்கே ஜனநாயகம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்திற்கு அரசின் தோல்வி அடைந்ததை மறைப்பதற்காக அரசு பொறுப்பில் இருந்து விலகிச் செல்வதற்காகஅரசு
இயந்திரங்களையும், அதிகாரிகளையும் தவறாக முறையில் வழிநடத்தி வருகிறார்கள்.இன்றைக்கு அரசு நடுநிலை, நம்பத்தன்மை இழந்து விட்டது. இன்றைக்கு அரசு நியாயமாக உண்மை தன்மையை கொண்டதா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இது தொடர்பாக கழகப்பொதுச் செயலாளர் எடப்பாடியார் கேள்விகளை எழுப்பி உள்ளார், இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை, ராமநாதபுரத்திற்கு வருகிறார் ஆகவே எடப்பாடியார் எழுப்பிய கேள்விக்கு உரிய பதிலை விளக்கம் அளிக்க ஸ்டாலின் முன்வருவாரா? என கேள்வி எழுப்பினார்

Exit mobile version