ராகுல் காந்தி போய் சொன்னதுக்காக கைதி செய்யப்பட்டுள்ளார். அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். அவர் என்ன தியாகியா?-
ஆணவ கொலை தொடர்பாக வாயை திறக்காத விஜய் தற்போது ஏன் வாயை திறந்தார்- முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி.!
தூத்துக்குடி விமான நிலையத்தில் முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ராகுல் காந்தி போய் சொன்னதுக்காக கைதி செய்யப்பட்டுள்ளார். அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். அவர் என்ன தியாகியா? அவர் சொல்வது பொய், பொய்யாக கூறி வந்ததால் நீதிமன்றத்தில் கூட குட்டு வாங்கி இருக்கிறார்.
முதல்வர் இன்னும் ஆறு மாதாம் தான் மகிழ்ச்சியாக இருப்பார். அதுவரை இருந்து விட்டு போகட்டும். 4 வருடத்தில் மக்களுக்கு கிடைக்காதது 4 மதத்தில் கிடைக்குது விடுமா, துப்புரவு தொழிலாளர்கள் ரோட்டில் நிற்கிறார்கள். மக்கள் பாதிப்படைந்துள்ளனர்,
தவெக தலைவர் விஜய் தேர்தல் நியாயமாக நடந்த வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். அது குறித்த கேள்விக்கு? விஜய்
வாயை திறந்து விட்டாரா பாவம் அவர் இவ்வளவு நாள் தூங்கி கொண்டு இருந்தாரா தெரியவில்லை. எவ்வளவு பிரச்னை நடந்து கொண்டு வருகிறது. கொஞ்சம், கொஞ்சமாக தூக்கத்தில் இருந்து எந்திச்சு வந்து சொல்லட்டும். பின்பு பார்ப்போம். தினம், தினம் மக்கள் பிரச்னை இருக்கு. அதனை கொஞ்சம் பாருங்கள்.
திருநெல்வேலியில் ஆணவ கொலை நடந்தது அப்போது விஜய் வாய் திறந்தாரா? திமுக கூட்டணி கட்சியினர் கடந்த ஆட்சியில் ஆணவ கொலை நடக்கும் போது ஆட்சி சரியில்லை என்றனர். இப்போது ஜாதி தான் காரணமா? தேர்தல் சீட்டுக்காக எது நடத்தாலும் வாய் முடி கொண்டு இருக்கிறாராகள்.
மேலும், விஜய் அப்போது எங்கு சென்றார். மக்களை பற்றி சிந்திக்கவில்லை. பெரிய இடைவெளி விட்டு திடீரென கேட்டால் எந்த விஜய் என்று கேட்க தோன்றுகிறது என்றார்..