திருவாரூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது  பிறந்தநாளை ஒட்டி 2லட்சரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75 ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் .
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகர் பகுதியில் திருவாரூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மாவட்ட தலைவர் ரஜினி சக்தி தலைமையில் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கீழவெளியில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து மேல சன்னதி தெருவில் ஏழை எளிய மக்களுக்கு மூன்று தையல் இயந்திரம் கிரைண்டர் வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது .
இதன் தொடர்ச்சியாக தெற்கு வீதியில் உள்ள கௌரிசாமி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு பேனா வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி தேவா , ரஜினி ரசிகர் மன்ற நகரத் தலைவர் ரஜினிமோகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பேட்டி:ரஜினிசக்தி.திருவாரூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர்.

Exit mobile version