தமிழக முதல்வரின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்களின் 73 ஆவது பிறந்த நாள் உலகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கு கொண்டாடப்பட்டன அதனை தொடர்ந்து 500க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வேட்டி சேலை இனிப்புகள் அடங்கிய தொகுப்பை திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ் மற்றும் திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் இணைந்து வழங்கினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு பலன் தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
