விழுப்புரத்தில் தைப்பூச விழா முன்னிட்டு வள்ளலார் சத்திய தர்மசாலை அன்பர்கள் சார்பில் நலத்திட்ட உதவி

விழுப்புரத்தில் தைப்பூச விழாவினை முன்னிட்டு வள்ளலார் சத்திய தர்மசாலை அன்பர்கள் சார்பில் 1000 ஏழை எளிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் தெற்கு ரயில்வே காலனி பகுதியில் வள்ளலார் சபை எதிரே வள்ளலார் சத்திய தர்மசாலை அன்பர்கள் சார்பில் அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தலைவர் அண்ணாமலை ஏற்பாட்டில் தைப்பூச திருவிழாவினை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் திமுக நகரப்பொருளாளர் ஜனகராஜ் கலந்து கொண்டு 1000 ஏழை எளிய குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கினார்.பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த மனிதநேய நலத்திட்ட நிகழ்ச்சி,
பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஏற்பட்டளர்கள் சிவகுமார் விக்னேஷ் சச்சிதானந்தம் முருகன் செல்வம் மூர்த்தி தங்கவேலு புகழேந்தி அருள் பாரதி உடனே இருந்தனர்

Exit mobile version