விழுப்புரத்தில் ADMK மாவட்ட கழக செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்த பசுபதிக்கு வரவேற்பு

விழுப்புரத்தில் அதிமுக மாவட்ட கழக செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்த பசுபதிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

அதிமுகவில் சிவி சண்முகம் தலைமையில் ஒரு பிரிவினரும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வரும் நிலையில் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிகழகத்திற்கு சிவி சண்முகம் தலைமையிலான தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சிவி சண்முகம் எஸ் பி வேலுமணி ஆகியோரை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த சிவி சண்முகத்தை நீக்கி பசுபதியை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததால் பசுபதியின் ஆதரவாளர்களான அதிமுகவை சார்ந்தவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பதவிபெற்று சென்னையில் இருந்து விழுப்புரம் வந்த பசுபதிக்கு அவரது ஆதரவாளர்கள் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, விழுப்புரம் அண்ணாமலை ஹோட்டல், நான்குமுனை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடித்தும் சால்வை மற்றும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்ததை தொடர்ந்து பசுபதி பழையபேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேலும் விழுப்புரத்தில் இரு அணிகளாக செயல்பட்டுவரக்கூடிய நிலையில் புதியதாக பொறுப்பேற்ற பசுபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் விழுப்புரம் நகரப்பகுதியில் அமைந்துள்ள அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வருவதற்கு சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து கட்சி அலுவகத்தில் குவிந்ததால் போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் புதிதாக பொறுப்பேற்ற பசுபதி தனது ஆதரவாளர்களும் கட்சி அலுவலகம் உள்ளே செல்லாமல் வெளியே காரில் சென்றபடி எடப்பாடி பழனிச்சாமி வாழ்க, அதிமுக வாழ்க என கோஷமிட்டு சென்றார்.

Exit mobile version