மன்னார்குடி அருகே பாமணி நாகநாதர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பாமணி நாகநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சிவாலயங்களில் நடைபெறும் முக்கிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. நாக தோஷ நிவர்த்தி தலமான இங்கு, பாமணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் நாகநாதர் – அமிர்த நாயகி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் மற்றும் பிற சிவராத்திரி, மாசி மகம் விழாக்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் நாகநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது கோவிலின் சுவாமி சன்னதியின் முன்பு மணமேடையில் நாகநாத சுவாமி மற்றும் அமிர்த நாயகி அம்பாள் உற்சவர் சுவாமிகள் எழுந்தருளி செய்து இருந்தனர் ஹோம குண்டத்தில் மங்களப் பொருட்களை சமர்ப்பித்து ஹோம பூஜை நடத்தப்பட்டது மணமேடையில் திருமாங்கல்யம் மற்றும் சீர்வரிசை பொருட்களை வைத்து பூஜை நடத்தினர் பின்னர் சுவாமிகளுக்கு திருமாங்கல்யம் அணிவித்தல் மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
