நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்புவோம் : ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக்

“ஓட்டுக்காக ஹிந்துக்களை அவமதிப்பது முறையல்ல” என்று ஸ்ரீராம் சேனா அமைப்பின் நிறுவனர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார்.

ஓசூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “தமிழக கிராமங்களில் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் மத மாற்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். முஸ்லிம்கள் ஜிகாத் மூலமாக பயங்கரவாதத்தை வளர்த்து, ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். இந்த செயல்களுக்கு தி.மு.க. அரசு துணை போகிறது,” என்றார்.

“மாநிலம் முழுவதும் கோவில்கள் மீது ஏற்படும் தாக்குதல்களை ஸ்ரீராம் சேனா அமைப்பு எதிர்த்து செயல்படுகிறது. எங்கள் நோக்கம் அரசியல் செய்யும் அல்ல. ஆனால் தர்மத்திற்கு எதிரான நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்,” என்றும் கூறினார்.

மேலும், “கர்நாடகத்தில் மூன்றாவது குழந்தை பெற்ற ஹிந்துக்களுக்கு 1 லட்சம் ரூபாய், நான்காவது குழந்தைக்கு 2 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்படும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

“விபூதி, குங்குமம், வளையல், பூ போன்றவை ஹிந்துக்களின் தர்மத்தை பிரதிபலிக்கின்றன. வெறும் ஓட்டுக்காக இந்த மத அடையாளங்களை அவமதிப்பது தவறானது. இதற்காக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்,” எனவும் அவர் கூறினார்.

Exit mobile version