”நாங்கள் விளையாட மட்டுமே வந்தோம்” – கைக்குலுக்க மறுத்த விவகாரத்தில் சூர்யகுமார் யாதவ் விளக்கம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் மோதல் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானை 127 ரன்களுக்கு வீழ்த்தி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றாலும், போட்டிக்குப் பிறகு இரு அணிகளுக்கிடையே வழக்கமான கைகுலுக்க நிகழவில்லை.

போட்டி முடிந்ததும், பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்க இந்திய அணியை காத்திருந்தனர். ஆனால், இந்திய வீரர்கள் யாரும் மைதானத்தில் தோன்றவில்லை. மேலும், இந்திய அணியின் டிரஸ்ஸிங் அறை கதவு மூடப்பட்ட காட்சிகளும் வெளிவந்தன. பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மைக் ஹெசன் இந்திய அணியின் அறை நோக்கிச் சென்றபோதும், வீரர்கள் வெளியே வராததால் பாகிஸ்தான் பக்கம் அதிருப்தி நிலவியது.

மறுபுறம், பரிசளிப்பு விழாவிலும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா பங்கேற்காதது கூட விமர்சனத்திற்கு உள்ளானது.

சூர்யகுமார் விளக்கம்

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், கைகுலுக்க மறுத்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது :

“இந்த விஷயத்தில் எங்கள் அரசு மற்றும் பிசிசிஐ ஒரே நிலைப்பாட்டில் இருந்தன. நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்தோம். அதற்கான சரியான பதிலை களத்தில் கொடுத்துவிட்டோம். விளையாட்டை விட வாழ்க்கையில் சில விஷயங்கள் மிக முக்கியமானவை.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் உறுதியுடன் நிற்கிறோம். இந்த வெற்றியை ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடத்திய நமது துணிச்சல் மிக்க ராணுவத்திற்கே சமர்ப்பிக்கிறோம். அவர்கள் எங்களை ஊக்கப்படுத்துவதுபோல, எங்களால் முடிந்தபோதெல்லாம் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க களத்தில் பாடுபடுவோம்.”

என சூர்யகுமார் தெரிவித்தார்.

Exit mobile version