தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன் இல்ல திருமண விழா இன்று நெடுவயல் கிராமத்தில் இன்று நடந்தது. இதில் பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா பங்கேற்று, மணமகன் மணிகண்டன் மணமகள் ஸ்ரீமதி ஆகியோரை வாழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா கூறியதாவது
தென்காசி மாவட்ட பகுதிக்கு வந்தாலே கனிம வள கொள்ளைக்கு அளவே இல்லாமல் போகிறது. அரசிடம் எத்தனை முறை முறையிட்டாலும் இதை தடுப்பதற்கு நடவடிக்கை இல்லை. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழக முழுவதும் துப்புரவு பணியை தனியாரிடம் ஒப்படைக்கிறார்கள் இதை அரசு உடனடியாக கைவிட வேண்டும். தனியாரிடம் ஒப்படைத்த போதிலும் ஊதியம் குறைவாக வழங்குகிறார்கள் நீதிமன்றம் இப்படி செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
திமுக அரசு மீது மக்கள் மிகப்பெரிய அதிருப்தியை கொண்டு உள்ளார்கள். அன்புமணி ராமதாஸின் நடை பயணம் சிறப்பாக நடைபெற்று வருகிறது விரைவில் ஆட்சி மாற்றத்தை இந்த தமிழகம் சந்திக்கும் திமுகவை வீட்டிற்கு அனுப்பக் கூடிய கூட்டணி உருவாக்கும் சூழலை பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கும் பொதுகுழு தீர்மானித்து யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்யும். திமுகவை வீட்டிற்கு அனுப்புவதற்கான கூட்டணி முடிவாகும்.
ஒவ்வொரு நேரமும் தேர்தல் வரும் கால்களில் மக்கள் பிரச்சனையை ஒட்டி தான் பா.ம.க. கட்சியின் கோரிக்கைகள் இருந்து வருகிறது. அதிமுகவுடன் கூட்டணியும் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தான் இடம் பெற்றது. இதேபோன்று பாமக வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய கூட்டணி 10.5% இட ஒதுக்கிட முன் வைத்து கூட்டணி அமைத்தது.
ஆனால் 10.5 இட ஒதுக்கீடு வராமல் இருந்தது ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இட ஒதுக்கீடு எப்படி வழங்க வேண்டும் என்பதை இது முன்மாதிரியாக இருக்கும் அந்த இடத்தில் இருந்து யோசித்து போது பார்த்தால் ஒரு அதிகாரம் இருந்தால் கூட்டணி ஆட்சியிலும் அதிகாரம் இருந்தால் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த முடியும்.
இதனால் கூட்டணி ஆட்சி அமைவது நல்லது என நினைக்கிறோம். ஒரு மாவட்டத்திற்குள் வேற வேற கருத்துக்கள் இருக்கும்போது கட்சிக்குள்ள பூசல்கள் இருப்பதால் மக்கள் பணிகள் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை மக்களுக்கான அனைத்து பிரச்சனைகளுக்கும் நாங்கள் போய் நின்று பிரச்சனை தீர்த்து வருகிறோம்.
பீஹார் பிரச்சாரத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் எழுதிக் கொடுத்தாலே சரியா பேச முடியாத ஸ்டாலின் ராகுல் காந்திக்கு ராஜீவ் காந்தி என பேசுகிறார் நிர்வாக திறமைக்கான ஒரு ஆள் அவரிடம் இல்லை சரியான ஆட்களை வைத்திருக்க வேண்டும் அதுவும் இல்ல தமிழ்நாட்டிலேயே ஒன்றும் செய்ய முடியாத ஸ்டாலின் அங்கு போய் பிரச்சாரம் செய்வது எப்படி ஆளில்லாத ஊருக்கு இலுப்பை விற்பனை செய்தது போன்று உள்ளது அவருடைய பிரச்சாரம் அமைந்திருக்கிறது.
தமிழகம் மக்கள் நேற்று முதல் இதை சமூக வலைதலத்தில் பரப்பி கொண்டிருக்கிறார்கள் ஒரு இயக்கத்தின் தலைவர்கள் அடிமட்டத்தில் இருந்து உருவாக வேண்டும். திரையில் இருந்து வந்து மக்களுக்கு பேசுவார்கள் வரலாம் அதே புகழ்பெற்ற நடிகர்கள் பக்கத்துல யாரும் நெருங்க விடாமல் வைத்தால் எப்படி ஒரு தலைவனுக்கு அழகாக இருக்க முடியும். நீங்களும் திரை நடிகர் என்று பார்த்துதான் செல்கிறார்கள்.
தலைவரா பார்க்கல ஒரே நடிகர் இருக்கிறார்கள் ஒரு கட்சியை உருவாக்குவதற்கு அழைப்பதற்கு ஆளை உருவாக்குவது காரணமாக இருக்கிறது. பவுன்சர்கள் இருந்தாலே அவர் தலைவரை உருவாக்கவில்லை நடிகராக இருந்தால் பவுன்சர்கள் உருவாக்கத்தான் செய்வார்கள் நீங்கள் காமராஜர் ஆட்சி கொண்டு வர வேண்டும் என்றால் காமராஜராக இருக்க வேண்டும். 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டால் காமராஜராக இருக்க முடியாது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமான நிலைமை தமிழகத்தில் 8 வயது குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது பாமக நின்று சந்திக்கக் கூடிய போராட்டத்தை முன்னெடுத்ததால் தமிழக அரசு கையில் எடுத்தது. அதை சட்டம் ஒழுங்கு தடுப்பது திமுகவிடம் உள்ளது டாஸ்மார்க் பூச்சிக் கொல்லி மருந்துகளை கொக்கக் கோலா குடிப்பது போன் r கொடுத்து வருகிறார்கள் இதேபோன்று போதை வஸ்தை பொருட்களை அதிகளவு விற்பனை செய்து வருகிறார்கள் முதலமைச்சர் தான் இதை முடிவு எடுத்து தடுத்து நிருத்த முன்வர வேண்டும். என இவ்வாறு கூறினார்.