September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

”மீண்டும் மன்னிப்பு கேட்க முடியாது” – கோவா மருத்துவர் விவகாரத்தில் பாஜக அமைச்சர் உறுதி !

by Priscilla
June 10, 2025
in News
A A
0
”மீண்டும் மன்னிப்பு கேட்க முடியாது” – கோவா மருத்துவர் விவகாரத்தில் பாஜக அமைச்சர் உறுதி !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

பணியிடை நீக்கம் அறிவித்ததாலும், மக்கள் முன்னிலையில் கொந்தளித்ததாலும் சிக்கலில் சிக்கிய பாஜக அமைச்சர் விஸ்வஜித் – மருத்துவரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என உறுதி!

கோவா மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய முதல்வராக ப்ரமோத் சாவந்த் செயற்பட்டு வருகிறார். இந்த நிலையில், கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்விற்குச் சென்ற சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வஜித் ரானா, அங்கு சேவையாற்றிய மருத்துவா் ருத்ரேஷ் குட்டிகரை மக்கள் முன்னிலையில் கடுமையாக திட்டியதுடன், அவரை பணியிடை நீக்கம் செய்வதாகவும் அறிவித்தார்.

வெளியான வீடியோவில், எந்தவித விசாரணையும் இல்லாமல் ஒரு மருத்துவரை அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொண்ட அமைச்சரின் செயல்கள் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தின. இதைத் தொடர்ந்து, கோவா மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. இந்திய மருத்துவர்கள் சங்கம் (IMA) மற்றும் கோவா மருத்துவர்கள் கூட்டமைப்பும் அமைச்சரின் நடவடிக்கையை கண்டித்து உறுதியான கருத்துகள் தெரிவித்தன.

இந்த விவகாரத்தில் முதல்வர் ப்ரமோத் சாவந்த் தலையிட்டு, அமைச்சர் விஸ்வஜித்-உடன் கலந்துரையாடிய பின், மருத்துவர் ருத்ரேஷ் பணியிடை நீக்கம் செய்யப்படமாட்டார் என்று அறிவித்தார். அதேசமயம், அமைச்சர் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய அளவிலான போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்படும் என எச்சரிக்கையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் விஸ்வஜித் ரானா, “மருத்துவர் ருத்ரேஷிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு தவறான வார்த்தைகள் பயன்படுத்தியதை வருத்தப்படுகிறேன். என் நோக்கம் மருத்துவரை அவமதிப்பது அல்ல” என்று விளக்கமளித்தார்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த மருத்துவர் ருத்ரேஷ், “அவமானப்படுத்திய அதே இடத்திலேயே நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர், “மீண்டும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டேன். இனிமேல் இந்த பிரச்னையை தீர்க்க நாம் இருவரும் சமரசமாக ஒரு குழுவாக இணைந்து பணியாற்ற வேண்டும்” எனக் கூறினார். மேலும், “ஒரு கப் தேநீர் அருந்தி பிரச்னையை முடிக்கலாம்” என்றும் அமைதிப்பூர்வமாக முடிவுக்கு அழைத்தார்.

Tags: BJP MinisterDOCTORgoa
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கர்நாடகா முடா வழக்கு : முதல்வர் சித்தராமையாவின் ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம் !

Next Post

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவர்களா? | Aura Babuji | Numerology | Astrology | Retro Aanmeegam

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.