விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே 32 அடி கொள்ளளவு கொண்ட வீடூர் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு ஆண்டுத்தோறும் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி தற்போது அணையில் 31 அடி நீர் உள்ள நிலையில்,வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக இன்று முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆரணி எம் பி தரணிவேந்தன் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பாசன கால்வாய்களில் தண்ணீரை திறந்து வைத்து மலர்களை தூவி நீரை வரவேற்றார். இன்று முதல் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை 135 நாட்களுக்கு விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட சிறுவை, வீடூர், பொம்பூர், பொன்னம்பூண்டி, ஐவேலி, நெமிலி, எறையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 2200 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் என மொத்தம் 3200 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி பெறுகின்றன. வீடுர் அணையிலிருந்து 135 நாட்களுக்கு 328.560 மில்லியன் கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது













