மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நான்கு சட்டமன்ற தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் , கழக அமைப்புச் செயலாளர், திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு இரா.காமராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் சிவா.இராஜமாணிக்கம் . மாவட்ட அம்மாப் பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம் , நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் , மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எஸ்.கலியபெருமாள் , அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
















