திருவாரூர் அருகே வெள்ளக்குடி பகுதியில் சாலை ஓரத்தில் வீசி எறியப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை…”
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் மன்னார்குடி சாலையில் உள்ள வெள்ளக்குடியிலிருந்து… திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள புலிவலம் பகுதிக்கு செல்லும் இணைப்புச் சாலை உள்ளது.
இந்த இணைப்பு சாலையில்…சாலையின் ஓரத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்களின் அடையாள அட்டைகள் வீசி எறியப்பட்டு சிதறி கிடக்கின்றது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது யார் வீசி எறிந்தது என்று தெரியாத நிலையில்..
தற்பொழுது நடைபெற்று வரும் வாக்காளர் திருத்தம்.. (S.I.R) நடைபெற்று வரும் நிலையில்.. பக்கத்து மாவட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் இவ்வாறு சாலையின் ஓரத்தில் வீசி எறியப்பட்டு சிதறி கிடப்பது..தங்களது வாக்கு என்ன நிலை ஆகும் என்று திருவாரூர் மாவட்ட வாக்காளர்கள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
