மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் காவல்நிலையம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கட்சி தலைவரும் சிதம்பரம் எம்.பியுமான திருமாவளவனுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் அப்போது விசிக தொண்டர் ஒருவர் சட்டை பையில் மறைத்து வைத்திருந்த சிறிய டப்பாவில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை மேலே ஊற்றி கொண்டு தீ குளிக்க முயன்றார் அவரை போலீசார் தடுத்து அழைத்து சென்றனர் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் கொள்ளிடம் போலீசார் மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தன் பேரில் மறியல் விலக்கி கொண்ட விசிகவினர் இதனால் சீர்காழி – சிதம்பரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துக்கு பிதிக்கப்பட்டது
