விழுப்புரம் மாவட்ட கேரம் சங்கத்தை சேர்ந்த மற்றும் விழுப்புரம் தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி பனிரெண்டாம் வகுப்பு மாணவரான V. பவன் குமார், 2025-2026 ஆம் ஆண்டுக்கான 50வது ஜூனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான சாதனை படைத்துள்ளார்.இந்தப் போட்டி மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் உள்ள LNIPE வளாகத்தில் நவம்பர் 1 முதல் 4 வரை நடைபெற்றது. இதில் பவன் குமார் தமிழ்நாடு அணியை சார்ந்து பங்கேற்று, அணிச் சாம்பியன்ஷிப் வகையில் தங்கப் பதக்கம் வென்றதுடன், தனிநபர் பிரிவிலும் ஜூனியர் ஆண்கள் பிரிவில் முதலிடத்தைப் பெற்று ஒரு கோப்பையும் தங்கப் பதக்கத்தையும் பெற்றார்.ஒரே போட்டியில் மொத்தம் இரண்டு தங்கப் பதக்கங்களும் இரண்டு கோப்பைகளும் பெற்ற அவர், விழுப்புரம் மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாகவும் தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ச்சியாக பதக்கங்கள் பெற்றுவரும் பவன் குமார் தற்போது இந்தியாவின் நம்பர்-1 ஜூனியர் தேசிய கேரம் சாம்பியனாக உயர்ந்துள்ளார்.

















