கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன்
விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில்
ரூ.78 லட்சத்தில் நியாயவிலைக் கடை, வகுப்பறை கட்டிடம்
லட்சுமணன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் 78 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கடை மற்றும் வகுப்பறை கூடுதல் கட்டிடங்களை லட்சுமணன் மண்டே திறந்து வைத்தார்.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிடாகம்குச்சிபாளையத்தில் புதிய நியாய விலை கடை கட்டிடம் மற்றும் பில்லூர் ஆதிராவிடர் குடியிருப்பில் நியாய விலை கட்டிடம், மாதிரி மங்கலத்தில் நியாய விலைகட்டிடம், மேல் பாதியில் நாடக மேடைகட்டிடம், அற்பச்சியம்பாளையத்தில் நியாயவிலை கடை கட்டிடம், குமளத்தில் 2 வகுப்பறை கொண்ட கூடுதல் கட்டிடம் என மொத்தம் ரூ.78 லட்சம் மதிப்பில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தொகுதி மேம்பாட்டில் கட்டப்பட்ட இந்த புதிய கட்டிடங்கள் திறப்பு விழா
நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக லட்சுமணன் எம்எல்ஏ பங்கேற்று இதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் நியாய விலை கடையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் தமிழ்ச்செல்விகேசவன், இலக்கிய அணி அன்பு கணபதி, ஒன்றிய செயலாளர்கள் முருகவேல், தெய்வசிகாமணி, பிரபாகரன், சேர்மன் சச்சிதானந்தம், துணை சேர்மன் உதயகுமார், மருத்துவ அணி துணை அமைப்பாளர் ஆகாஷ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
