இளைஞர்கள் சினிமாக்காரர்களின் கலையை ரசிக்கட்டும் ஆனால் மக்களுடன் மக்களாக அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தர கூடியவராக யார் இருக்கிறார்கள் என இளைஞர்களுக்கு திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டு திமுக பொது உறுப்பினர்கள் அறிவுறுத்த வேண்டுமென விழுப்புரத்தில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் அறிவுறுத்தல்
விழுப்புரம் அருகே உள்ள திருப்பாச்சலூரில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான லட்சுமணன் அவர்களின் தலைமையில் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவிக்கையில் திருப்பாச்சனூர் ஊராட்சி திமுகவின் கோட்டையாக தொடர்ந்து இருந்து கொண்டு வருகிறது மேலும் 2026 ல் வர இருக்கும் தேர்தலில் முன்பு வாங்கிய வாக்குகளை விட அதிகமாக வங்கி 2026 லும் இரண்டாவது முறையாக மு க ஸ்டாலினை முதலமைச்சராக ஆக்க தொடர்ந்து பணி செய்ய வேண்டும். இளைஞர்கள் மத்தியில் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு புதிதாக சினிமாவில் இருந்து வந்திருப்பவர்கள் இளைஞர்களை மாற்ற நினைக்கிறார்கள் அவர்களிடம் தமிழக முதலமைச்சர் இளைஞர்களுக்கு செய்திருக்கக் கூடிய திட்டங்களை எடுத்துக் கூறி கலையை ரசியுங்கள் ஆனால் மக்களுடன் மக்களாக யார் இருக்கிறார்கள் அடிப்படை வசதிகள் யார் செய்து தருகிறார்கள் எனவும் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் அனைவரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய அரசாக இருக்கும் என இளைஞர்களிடையே அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தார்
















