மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சியில் அரசு வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டின் உள்சுவர் இடிந்து விழுந்து ஐந்து வயது சிறுமி உயிர் இழந்த விவகாரம். வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் விபத்து நேர்ந்ததாகவும் இதற்கு காரணமான ஒப்பந்ததாரர் மற்றும் பணியினை கண்காணிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காளி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் கிராம மக்கள் கையில் சிரிய பேப்பர் பதாகைகள் ஏந்தி வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காளி ஊராட்சியில் அரசின் சார்பாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி பாலையா என்பவருக்கு சொந்தமான அரசு வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்டு முழுமைபெறாத வீட்டின் உட்புறச் சுவர் இடிந்து விழுந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சஹானாஶ்ரீ என்ற ஐந்து வயது சிறுமி பரிதாமாக உயிரிழந்தார்.
இவ்விவகாரத்தில் அரசு வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அரசால் கட்டி கொடுக்கப்படும் வீடுகளின் கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்றதால் விபத்து ஏற்பட்டு சிறுமி உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டியும், தரமற்ற முறையில் கட்டுமான பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மற்றும் கட்டுமான பணியை கண்காணிக்காத அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணம் வழங்கவும், அவரது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், காளி ஊராட்சியில் வீடு அற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை வழங்கி தரமான வீடு கட்டி தர கோரியும், காளி அரசு மருத்துவமனையில் 108 ஆம்பூலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தியும் இறந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் காளி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கையில் பேப்பர் பதாகைகளை ஏந்தி வந்த கிராம மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது அதிகாரிகள் யாரும் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல் கடந்த 15ஆம் தேதி சுதந்திர தின விழாவை புறக்கணித்து ஊராட்சிகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தியதால் அங்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம மக்களை மிரட்டுவது போல் பேசி சென்றுள்ளனர் எனவே காலி ஊராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும்.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும், காளி ஊராட்சியில் கட்டப்பட்ட அரசு வீடுகள், தனிநபர் கழிப்பறைகள் கட்டுமான பணி முறைகேடுகள், அரசு திட்டபணிகளில் உள்ள முறைகேடுகள் குறித்துஉயர்மட்ட குழுவினை அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் காலவரையற்ற தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தனர்.
பேட்டி: ஈழவளவன் முன்னாள் மாவட்ட செயலாளர் விசிக
