சீர்காழி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட தார் சாலையை முழுவதுமாக அமைத்துதரக் கோரி கிராம மக்கள் கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புங்கனூர் ஊராட்சியில் பட்டக்கால் தெரு அமைந்துள்ளது.இங்குள்ள மக்களுக்கு பிரதான சாலையாகவும் ,மயான சாலையாகவும் இந்த வாய்க்காங்கரை சாலை உள்ளது.பல ஆண்டுகளாக இந்த சாலையை தார்சாலையாக அமைத்து தர கோரி ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்திலும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பல முறை மனு அளித்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வாய்க்காங்கரை சாலையை ஜல்லி மட்டும் போட்டு பணியை நிறுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு இந்த பகுதிக்கு தார் சாலை, சிமெண்ட் சாலை மின்கம்பங்கள் அமைக்கப்படும் என கூறி சிமெண்ட் சாலை,மின்கம்பங்கள் அமைத்து விட்டு தார்சாலையை முழுவதும் போடாமல் பெயரலவிலே போட்டு நிறுத்தியுள்ளனர்.இது குறித்து கேட்டபோது ஜனவரி மாதத்தில் முழுவதும் தார் சாலை அமைக்கப்படும் என கூறி நிலையில் இது வரை சாலை அமைக்கப்படாமலே உள்ளது.இந்த சாலை இவர்களுக்கு பிரதான சாலையாகவும் மயான சாலையாகவும் உள்ளது. சாலையின் இரு புறமும் புதர் மண்டி உள்ளதால் பொது மக்கள் சுற்றியே செல்கின்றனர்.இறப்பு ஏற்படும் நேரத்தில் இந்த சாலையை சுத்தம் செய்து தூக்கி செல்லும் நிலை ஏற்படுகிறது.எனவே பாதியில் திறுத்தப்பட்ட தார்சாலையை முழுவதுமாக அமைத்து தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
