சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த பொதுமக்கள் குறைத்தீர் கூட்டத்தின் போது சீர்காழி பனமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றிணைந்து ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பனமங்கம் வடக்குத்தெரு, நடுத்தெரு, தெற்குதெரு, குமாரநத்தம் ஆகிய கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் வழிப்படக்கூடிய வீரன்கோவில் தென்பாதி பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்துமக்கள் மட்டுமே வசித்துவரும் இடத்தில் வீரன்கோவில் அருகே திருச்சியை சேர்ந்த சிலர் இடம்வாங்கி கிறிஸ்தவ தேவாலயம் கட்டி அப்பகுதி மக்களிடம் பிரச்னையை ஏற்படுத்தும் சுழலை உருவாக்கி வருகின்றனர். விவசாய நிலங்கள் நிறைந்த பகுதியில் தேவாலயம் மற்றும் கல்லரைகள் கட்டினால் விளைநிலங்கள் பாதிப்பதோடு அருகில் இருக்கின்ற நிலங்களில் மதிப்பும் குறையும். கிறிஸ்தவர்கள் யாரும் வசிக்காத பகுதியில் தேவாலயம் கட்டினால் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இந்துக்களுக்கிடையே ஒற்றுமை சீர்குலைத்து அமைதிக்கு பங்கம் ஏற்படும். எனவே மேற்படி இடத்தில் தேவாயலம், கல்லைறை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் எவ்வித அனுமதியும் வழங்க வேண்டாம் என்று அதில் கேட்டுக்கொண்டுள்ளனர். நீர்க்கட்டினால் பொதுமக்கள் ஒன்று திரண்டு வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பேட்டி. ராஜசேகர் சீர்காழி பணமங்கலம் கிராமவாசி.
