மயிலாடுதுறை அருகே கடக்கம் ஊராட்சியில் மயான பாதை இல்லாததால், சடலத்தை சேறும், சகதியுமான வயல்வெளியில் தூக்கிச் சென்ற கிராமக்கள்:- மயான பாதை அமைத்துத் தந்து, அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழகடக்கம் கிராமத்தில் நடுத்தெரு, மேட்டுத்தெரு, ஆற்றங்கரை தெரு, வீச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆற்றங்கரை ஓரத்தில் மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு செல்லும் பாதை சேறும், சகதியுமாக இருப்பதால் மழைக்காலங்களில் உயிரிழப்பவர்களின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு கொண்டுசெல்லும் கிராமமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தெற்குத் தெருவை சேர்ந்த முத்தையன் என்பவரது மனைவி தனம் இன்று உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை அடக்கம் செய்ய மயானத்துக்கு இருட்டில் தட்டு தடுமாறி சேரும் சகதியுமான பாதையில் வயல்வெளி வழியாக உடலை தூக்கி சென்று அடக்கம் செய்தனர். மயான சாiலை அமைத்து, அதில், மின்சாரம் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கிராமமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
