விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா அவர்கள் சட்டப்பேரவையில் கோரிக்கை – நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் அறிவிப்பு
இன்று சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருதுவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்த வேண்டும், மழைக்காலங்களில் மருத்துவமனை , மற்றும் டீன் குடியிருப்பு தண்ணீர் தேங்குகிறது என விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா அவர்கள் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்
அதற்கு பதில் அளித்து பேசிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன மருத்துவமனை மற்றும் டீன் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்காத அளவிற்கு மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்
