“விஜயின் அரசியல் ஒரு இன்குபேட்டர் குழந்தை” – வைகைச்செல்வன் விமர்சனம்

காஞ்சிபுரம் :
அதிமுக சார்பில் நடைபெற்ற திண்ணை பிரசாரக் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், நடிகர் விஜயின் அரசியல் பயணத்தை கடுமையாக விமர்சித்தார்.

“விஜய்யின் பிரசாரங்கள் திட்டமிடப்படாதவையாகத் தோன்றுகின்றன. அவர் ஒரு ‘இன்குபேட்டர் குழந்தை’ போல முழுமையாக வளர்ச்சி அடையாத தலைவர்,” என்று வைகைச்செல்வன் கருத்து தெரிவித்தார்.

மேலும், திண்டுக்கல்லில் நடிகை நயன்தாராவைப் பார்ப்பதற்காக 60,000 பேர் திரண்டது, சேலத்தில் கடை திறப்பு விழாவில் பெரும் மக்கள் கூட்டம் கூடியது போன்ற உதாரணங்களைச் சுட்டிக்காட்டிய அவர், “2011-ம் ஆண்டு வடிவேலுக்காகவும் மக்கள் கூட்டம் திரண்டது. ஆனால் நடிகர்களைப் பார்ப்பதற்காக மக்கள் கூடுவது ஒரு விஷயம், அவர்களது கொள்கை மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் மக்கள் ஆதரவு வழங்குவார்கள்” என்று தெரிவித்தார்.

Exit mobile version