தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
தவெக மாநாடு தொடங்குவதற்கு முன்பு தவெகவினர் பிரபல யூடியூபர் முக்தாரை விரட்டியடித்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது தவெக மாநாட்டு திடலில் மாஸ்க் அணிந்த முக்தார் வந்திருந்தார்.
தவெகவுக்கு எதிராக பேசும் முக்தார் வெளியேறு. யூடியூபர் முக்தார் வெளியேறு” என்று தவெக தொண்டர் ஒருவர் கத்தி கூச்சலிட அங்கிருந்த அனைத்து தவெக தொண்டர்களும் முக்தார் வெளியேறும்படி கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந்து முக்தார் மாநாட்டுத் திடலில் அவசரம் அவசரமாக வெளியே சென்றார். அப்போதும் அவரை விடாமல் பின்தொடர்ந்து சென்ற தவெக தொண்டர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்களிடம், ”சார் முக்தாரை வெளியேற்றுங்கள்” எண்று ஆவேசமாக கூறினார்கள். இதனால் மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு நிலவியது.
பிரபல யூடியூபரான முக்தார், நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கியதில் இருந்து அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய் வீட்டில் இருந்து அரசியல் செய்வதாகவும், மக்களை சந்திக்கவில்லை என்று தொடர்ந்து விமர்சித்தார். இதனால் கடும் கோபம் கொண்ட தவெகவினர் அவரை விரட்டியடித்துள்ளனர். முக்தார் திமுக கட்சியின் ஆதரவாளர் என தவெகவினர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.