காஞ்சிபுரத்தில் நாளை விஜய் மக்கள் சந்திப்பு

தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை காலை 11 மணிக்கு காஞ்சிபுரத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

விஜய் நேரடியாக பங்கேற்கும் இந்த சந்திப்பு முழுக்க முழுக்க உள்ளரங்கு நிகழ்ச்சியாக திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, முன்கூட்டியே QR குறியீட்டுடன் கூடிய நுழைவு சீட்டுகளைப் பெற்ற 2,000 பேருக்கு மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படும்.

நுழைவு சீட்டு இல்லாதவர்களுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை எனவும், கட்சியினரும் பொதுமக்களும் ஒழுங்குக்கு முழு ஒத்துழைப்பளிக்க வேண்டும் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version