நடிகர் விஜய், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு முடித்த பின், தனது புதிய கட்சி, தமிழக வெற்றிக்கழகம் மூலம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைகளை தீவிரமாக முன்னெடுக்கிறார்.
விஜய் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் பல பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் வாரம் திருச்சி மற்றும் அரியலூரில், இரண்டாவது வாரம் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் பரப்புரை செய்தார். இன்று நாமக்கல் மற்றும் கரூர் பகுதிகளில் பரப்புரை செய்யிறார்.
இந்த சுற்றுப்பயணங்களில் விஜய் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் பயணம் செய்தார். குறிப்பாக, கடந்த மே 1-ம் தேதி கொடைக்கானல் படப்பிடிப்பிற்கு சென்றதும், இன்று நாமக்கல் செல்லும் பயணத்திலும் தனி விமானத்தை பயன்படுத்தினார்.
விஜய் பயணிக்கும் விமானம் VT-PCR – Gulfstream G200 மாடல், மற்றும் கடந்த இரண்டு வாரங்களாக இதே விமானத்தில் பயணித்துள்ளார். விமானத்தின் மதிப்பு ரூ. 8 கோடி வரை என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாள் வாடகை ரூ. 14 லட்சம் வரை செலுத்தவேண்டியதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த விமானம் ஹைதராபாத்தை தளமாக கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு பரப்புரைக்கும் முன்னதாக ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு விமானம் வந்து பின்பற்றுவதாக FlightAware இணையதளம் தகவலளிக்கிறது.
சென்னையிலிருந்து திருச்சிக்கு பயணம்: இந்த விமானம் சென்னையிலிருந்து திருச்சிக்கு 38 நிமிடங்களில் சென்றதாக FlightAware மூலம் தெரியவந்துள்ளது.
