மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் நோக்கி பழனிஆண்டவர் மற்றும் யோகமங்களம் ஆகிய தனியார் பேருந்துகள் நேற்று இரவு புறப்பட்டுள்ளது. பயணிகளை ஏற்றுவது தொடர்பாக இரு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துகிறார்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பழனிஆண்டவர் பேருந்து முன்னால் புறப்பட்டு சிதம்பரம் நோக்கி சென்றுள்ளது. முன்னால் சென்ற பேருந்தை விரட்டிக் கொண்டு வந்து வைத்தீஸ்வரன் கோவில் அருகே வழிமறித்துள்ளனர். தொடர்ந்து முன்னாள் சென்ற பழனி ஆண்டவர் பேருந்தின் உள்ளே நுழைந்த யோகமங்களம் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் எங்கள் பேருந்தின் நேரத்தில் ஏன்? உங்கள் பேருந்தை இயக்குனீர்கள் எனக்கூறி முன்னாள் சென்ற பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பழனி ஆண்டவர் பேருந்தின் ஓட்டுனர் உதயகுமார் நடத்துனர் அபினேஷ் ஆகிய இருவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து இரு பேருந்துகளின் ஓட்டுனர்கள் கொடுத்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
