முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை காணொலிக் கூட்டம்

சென்னை : திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நண்பகல் 12 மணிக்கு காணொலிக்காட்சி மூலம் நடைபெற உள்ளது. பொதுச்செயலாளர் துரைமுருகன் இதுகுறித்து அறிவித்துள்ளார்.

ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்து இன்று காலை சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.

பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியதாவது, இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும், 17ஆம் தேதி கரூரில் நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழா தொடர்பான திட்டமிடல் பணிகள், தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையின் தற்போதைய நிலை உள்ளிட்ட விவாதங்கள் கூட்டத்தில் நடத்தப்பட உள்ளன.

கடந்த மாதம் 13ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முன்னோடியாக நடைபெற்றது.

Exit mobile version