செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் விடுதலை செய்யபட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி உண்மைக்கு கிடைத்த வெற்றி

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் விடுதலை செய்யபட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி
அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தன் மீது தொடரப்பட்ட பொய் வழக்கு எப்பொழுதும் எடுபடாது என்பதற்கு இந்த வழக்கு உதாரணம் உண்மைக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்*

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததில் இவ்வழக்கில் தீர்ப்பினை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மணிமொழி இன்று வழங்கினார். இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 57 பேரில் 33 பேர் அரசுக்கு பாதமாக சாட்சி அளித்துள்ளதாலும் போதிய அளவு ஆவணங்கள் தாக்கல் செய்யபடடாததாலும் ஏற்கனவே பள்ளமாக இருந்த பகுதியில் செம்மண் எடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பினர் நீருபித்திருப்பதால் 7 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி மணிமொழி உத்தரவிட்டார். நீதிபதி மணிமொழி தீர்ப்பினை தொடர்ந்து தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பூத்துறை கிராமத்தில் கலைஞர் ஆட்சி காலத்தில் முறைகேடாக செம்மண் எடுத்ததாக கடந்த 2012 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுகவினர் தான் குவாரியில் தவறு செய்ததாக அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தன் மீது பொய் வழக்கினை தொடர்ந்ததாக கூறினார். ஆட்சி மாற்றம் வந்தால் வழக்கினை திரும்ப பெறுவார்கள் ஆனால் இந்த வழக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு தன்னுடைய வழக்கறிஞர்கள் மூலம் உண்மையை எடுத்து சொல்லி பொய் வழக்கு என்று நிரூபிக்கும் வகையில் நீதிபதி அவர்களும் விடுதலை செய்து தீர்ப்பளித்து உள்ளதாக கூறினார். இந்த வழக்கு எதிர்கட்சிகளை பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்தோடு அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக நிருபித்துள்ளதாகவும் பொய் வழக்குகளை போட்டு திமுகவை எப்படியாவது முடக்கி விடலாம் என நினைத்தார்கள் அந்த எண்ணம் நிறைவேறவில்லை என தெரிவித்த அவர் தனக்கு மட்டுமல்ல கட்சி நிர்வாகிக்கும் கட்சி தோழர்களுக்கும் வெற்றியாக கருதுவதாக தெரிவித்தார். பொய் வழக்குகள் எப்பொழுதும் எடுபடாது என்பதற்கு இந்த வழக்கு உதாரணம் என்றும் உண்மையை விரும்புபவர்களுக்கு கிடைத்த வெற்றி வேண்டுமென்றே அப்போதைய முதலமைச்சர் தன் மீதும் தனது மகன் உறவினர்கள் மீதும் என 8 பேர் மீது வழக்கு தொடுத்தார்கள் இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என பொன்முடி தெரிவித்துள்ளார்.

Exit mobile version