மதுரை :
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி தொடர்பான வழக்கில் அனைத்து தரப்புகளின் வாதங்களையும் கேட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை, தீர்ப்பை இன்றே வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த வழக்குக்கான பின்னணி என்னவெனில், தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனிநீதிபதி சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்யக் கோரி, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் ஏற்று, இன்று இதை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்தது.
இதற்கிடையில், மனுதாரர் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மனுவை நிறுத்திவைக்க கோரி, மற்றொரு மனுவும் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் சார்பில் தொடரப்பட்டது.
இரண்டு மனுக்களும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் – ராமகிருஷ்ணன் அமர்வில் ஒன்றாக விசாரிக்கப்பட்டன.
அரசு தரப்பு வாதம், அரசு தரப்பில் வாதித்த போது,, தனிநீதிபதி எடுத்த நடவடிக்கை நீதித்துறை வரம்பை மீறுவதாக கூறப்பட்டது. தற்காலிக உத்தரவைப் பெற்றவுடன் உடனடியாக தீபம் ஏற்ற முயன்றது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தியதாகவும் வாதிடப்பட்டது., நீதிபதி தீர்ப்பால் சமூக நல்லிணக்கமும், சட்ட-ஒழுங்கினும் பாதிப்பு ஏற்பட்டதாக அரசு தெரிவித்தது.
CISF படை உயர்நீதிமன்ற பாதுகாப்புக்காக மட்டுமே இருப்பதால், அவர்களைக் கொண்டு சட்டம்-ஒழுங்கு பேண இயலாத சூழல் உருவானதாகவும் கூறப்பட்டது.
எனவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென அரசு வலியுறுத்தியது.
இந்து சமய அறநிலையத்துறை வாதம், இந்து அறநிலையத்துறை சார்பில், 1862 முதல் தீபத் தூண் பயன்பாட்டில் இல்லை; 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என்பதை தனிநீதிபதி தாமே ஏற்றுக்கொண்டதாகவும்,, வழக்குகள் நிலுவையில் இருந்தபோதும் அவசர உத்தரவு வழங்கியது நடைமுறைக்கு முரணானது என்றும் தெரிவிக்கப்பட்டது.
தர்கா நிர்வாகத்தின் கருத்து : கோவில் நிர்வாகத்தைத் தாண்டி மனுதாரருக்கே தீபம் ஏற்ற அனுமதி அளித்தது ஏற்றுக்கொள்ள முடியாது என தர்கா தரப்பு வாதிட்டது. இதற்கு பதிலாக நீதிபதிகள், “ஆண்டிற்கு ஒருமுறை சில மணி நேரம் தீபம் ஏற்றுவது எப்படி சமூக பிரச்சனையை உருவாக்கும்?” என்று கேள்வி எழுப்பினர்.
குறிப்பிட்ட நேரத்தில் தீபம் ஏற்ற உத்தரவு இருக்கும்போது, எந்தவித ஏற்பாடும் செய்யாமல் இருந்தது கோவில் நிர்வாகத்தின் தவறாகும் என்றும் கருத்து தெரிவித்தனர். தனிநீதிபதி தண்டனை விதிக்கவில்லை; நடைமுறைக்கான மாற்று உத்தரவுகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டனர்.
தீர்ப்பு இன்று
அனைத்து தரப்புகளின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பு இன்று வழங்கப்படும் என தெரிவித்தார்.
















