தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த வேல்முருகன்

கடலூர் மாவட்டம் வடலூர் என்எல்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் தமிழக அரசுக்கும் – மாவட்ட நிர்வாகத்திற்கும் எதிராக மக்களை திரட்டி போராடுவேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

*நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நில எடுப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த வானதி ராயபுரம் பகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வருகிறது. அக்கட்சியின நிறுவனத்தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் விவசாயிகள்,பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேல்முருகன்,என்எல்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் தமிழக அரசுக்கும் – மாவட்ட நிர்வாகத்திற்கும் எதிராக மக்களை திரட்டி போராடுவேன் என எச்சரிக்கை விடுத்தார்.

Exit mobile version