தைப்பூச திருவிழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் வள்ளலார் சத்திய தர்மசாலை அன்னதானம் 

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் வள்ளலார் சத்திய தர்மசாலை அன்பர்கள் சார்பில் 4000 பேருக்கு தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது.

தைப்பூச திருநாளை முன்னிட்டு,
விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள
தெற்கு ரயில்வே காலனி பகுதியில்,
வள்ளலார் சபை எதிரே
வள்ளலார் சத்திய தர்மசாலை அன்பர்கள் சார்பில்
பொதுமக்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
சிறப்பாக நடைபெற்றது.அகில உலக சமரச சுத்த சன்மார்க்க
சத்திய சங்கத்தின் தலைவர்
அண்ணாமலை அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,
விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த
ஏழை எளிய மக்கள் உட்பட
சுமார் 4000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்களின் துணைவியார் விசாலாட்சி பொன்முடி,கலந்து கொண்டு,
4000 பேருக்கான அன்னதான வழங்கும் விழாவை
தொடங்கி வைத்தார்.வள்ளலார் வழியில்,
“பசித்தவனுக்கு உணவளிப்பதே உயர்ந்த தர்மம்” என்ற
மனிதநேய நோக்குடன் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சியில்,
ஆண்கள், பெண்கள், முதியோர், குழந்தைகள் என
பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு உணவு பெற்றனர்.

Exit mobile version