திமுகவை துடைத்து எறிவோம் என அமித்ஷா அகம்பாவத்துடன் பேசியுள்ளார். திராவிடத்தை அழித்தொழிப்பது ஒருக்காலமும் நடக்காது. மதுராந்தகத்தில் கூட்டம் நடத்திய பாசிச சக்திகளின் எண்ணம் பலிக்காது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று
மயிலாடுதுறையில் மதிமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று பேச்சு:-
மயிலாடுதுறை சின்னக்கடை தெருவில் மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. மதிமுக துணை பொதுச் செயலாளர் ஆடுதுறை முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தைப் போற்றி சிறப்புரையாற்றினார். அப்போது, தொடங்கிய மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் குடைகளை பிடித்தவாறு கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் வைகோ பேசுகையில், நெய்வேலி என்எல்சி நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முற்பட்டபோது, பிரதமர் வாஜ்பாயிடம் நேரடியாக வாதிட்டு தனியார் மயமாக்கப்படாது என்ற உறுதியை பெற்று தந்துள்ளேன். நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்றபோது இலங்கை அதிபர் ராஜபக்சே சிறப்பு அழைப்பாளராக அழைப்பு விடுக்கப்பட்டதை கண்டித்து டெல்லி ஜந்தர்மந்தரில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளேன். டாக்டர் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இந்தியில் மொழிபெயர்த்து அதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயன்றபோது தனிநபராக எதிர்ப்பு தெரிவித்து, அரசியலமைப்பு சட்டம் மசோதா நகலை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளேன். எங்களிடம் பெரிதாக வாக்கு வாங்கி கிடையாது. ஆனால் எங்களிடம் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் கொள்கை உறுதி கொண்டவர்கள். திமுகவை துடைத்து எறிவோம் என அமித்ஷா அகம்பாவத்துடன் பேசியுள்ளார். திராவிடத்தை அழித்தொழிப்பது ஒருக்காலமும் நடக்காது. மதுராந்தகத்தில் கூட்டம் நடத்திய பாசிச சக்திகளின் எண்ணம் பலிக்காது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார்.














